Explore

ATP சிந்தேசு நொதி

மொழியாக்கம்: மகிபன் ராஸ்

இந்த அனிமேஷன் வரிசை முறை ATP சிந்தேசு நொதியின் செயல்முறையை காட்டுகிறது. இந்த அனிமேஷன் நம்பமுடியாத தொடர் அறிவியல் கண்டுபிடிப்புகளின் அடிப்படையாக கொண்டது. இத்தனை நிறங்கள் இந்த நொதியின் செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக வேறுபடுத்தி காட்டப்பட்டுருக்கிறது

ATP அல்லது அடினோசின் டிரைபாஸ்பேட் செல்லின் ஆற்றல் ஆகும். ATP ஒரு சிறிய மூலக்கூறு சுழலும் மோட்டார் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது, இது நிமிடத்திற்கு ஏழாயிரம் முறை சுழலும் தன்மை கொண்டது. இவைகள், நூறாயிரம் மோட்டார்கள் ஒரு மில்லிமீட்டரில் அருகருகே பொருந்தும் அளவுக்கு சிறியவை. புரோட்டான்களின் மின்னோட்டம் மோட்டாரை இயக்க வைக்கிறது, ஆனால், மனிதனால் உருவாக்கப்பட்ட மின் மோட்டார்கள், எலக்ட்ரான்களை உபயோகப்படுதுகின்றன. அந்த வகையில் இது வேறுபட்டது.

ATP சிந்தேசு நொதியின் இந்த பகுதியில் தான் அடினோசின் டைபாஸ்பேட், பாஸ்பேட் அயனியுடன் இணைந்து, ஒரு ஊக்கியின் விளைவாக, ATP உற்பத்திச்செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்படும். பின்னர், அடுத்த சுழற்சி தொடரும். நொதியை மேலிருந்து பார்க்கும்போது, அடுத்தடுத்து நடக்கும் இதன் செயல்பாட்டை காட்டுகிறது. கிட்டத்தட்ட உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு உயிர்வேதியியல் செயல்முறைக்கும் ATP அவசியமாகும்.

இத்தகைய ஒரு நானோ இயந்திரம், மகா-அறிவார்ந்த வடிவமைப்பின் அனைத்து சிறப்பியல்புகளையும் வெளிப்படுத்துகிறது. ஏடிபி உயிர் வாழ்விற்கு முக்கியமானது, முதல் உயிரணு தோற்றுவிக்கப்படுவதற்கு முன்பு, இந்த வகையான பல மோட்டார்கள் தேவை இது பரிணாமத்தால் இயலாத காரியம்.

creation.com/tamil