Explore

பெல்ஜிய நீல பசுக்கள்

பின்-பரிணாமத்திற்கான ஆதாரம்

மொழியாக்கம்: மகிபன் ராஸ்

அர்னால்ட் ஸ்வார்ஷ்நேக்கரிடம் செல்ல பசு ஒன்று இருந்தால், என்னால் ஏறத்தாழ உறுதியாக கூற முடியும், அது ஒரு பெல்ஜிய நீல பசுவாகத்தான் இருக்கும். இந்த பசுக்கள் நம்பமுடியாத தசைகள மற்றும் மிக குறைவான கொழுப்பு தன்மை கொண்டது. பல மக்கள், இந்த இனம் பரிணாமவளர்ச்சி காரணமாக வந்தது என்றும், எப்படியெனில், அதன் டிஎன்ஏ-வில் ஒரு நிலைமாற்றம் முன்னேற்றத்தை. கொண்டு வந்துள்ளது என்று நம்புகின்றனர்.

ஆனால் நுண்ணுயிரிகள் உண்மையிலேயே பெல்ஜிய நீல பசுவாக மாறி இருந்தால்; அதை தான் பரிணாமம் கற்றுக்கொடுக்கிறது, இதற்காக இன்னும் ஏராளமான டிஎன்ஏ தகவல் தேவைப்படும், இது மிகவும் எளிமையான மரபணு கொண்ட ஒரு பாக்டீரியாவை மிகவும் சிக்கலான மரபணு கொண்ட பசுவாக மாற்றுவது போன்றது.

எனினும், பெல்ஜிய நீல பசுக்கள் விஷயத்தில், நாம் எதிர்மறையாக பார்க்கின்றோம். ஏனெனில், எந்த புதிய தகவலும் மரபணுக்களில்.சேர்க்கப்படவில்லை. உண்மையில், ஒரு சடுதி மாற்றம் மியோஸ்டடின் மரபணுவை சிதைத்துள்ளது. இது, பொதுவாக தசைகள் மிகவும் அதிகமாக வளர்வதை தடுக்கும், எனவே தகவல் இழக்கப்பட்டிருக்கிறது. இந்த பசுக்கள் தசை வளர்ச்சியின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டன. எனவே பெல்ஜிய நீல பசுக்களில் பின்-பரிணாமம் நடந்துள்ளது, ஆனால் பரிணாமம் அல்ல!

மேலும், சர்வதேச படைப்பின் ஊழியங்கள் குறித்து அறிய எங்கள் இணையதளத்தை பாருங்கள், creation.com/tamil.